குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
1980 – 90 காலகட்டங்களில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில். தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர்கள் இருவரும் இணைந்து குழந்தைகள் முன்னேற்றக் கழகம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து இமயவர்மன், அத்வைத் ஜெய் மஸ்தான், பவாஸ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் இயக்குனர் சங்கர் தயாள் இயக்கியுள்ளார். இதனை மீனாட்சி அம்மன் மூவிஸ் நிறுவனத்தின் கீழ் அருண்குமார் சம்பந்தம் மற்றும் இப்படத்தின் இயக்குனர் சங்கர் தயாள் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். ஜெ. லக்ஷ்மன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சாதகப் பறவைகள் சங்கர் இதற்கு இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் கெவின் இதன் எடிட்டிங் பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி வருகின்றன. அதே சமயம் இந்த படத்தின் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படமானது வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.