‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஷ்ணு விஷால் இயக்கத்தில் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மியா ஜார்ஜ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.

தமிழில் இந்த மாதிரியான தமிழில் சயின்ஸ் பிக்ஷன் படங்கள் வருவதே அரிது. அதை மக்களுக்கு புரியுமாறு பிடிக்குமாறு எடுத்து வெற்றி பெற்றார் ரவிக்குமார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டாம் பாகம் உருவாகும் என படத்தின் தயாரிப்பாளர் சிவி குமார் தெரிவித்தார்.
முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால் இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில காரணங்களால் விஷ்ணு விஷால் படத்திலிருந்து விலகிவிட்டாராம். ஆனால் விஷ்ணு விஷாலுக்குப் பதிலாக மற்றொரு நடிகர் படத்தில் நடிப்பார் என்று தற்போது கூறப்படுகிறது.
அவருக்கு பதில் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரவிக்குமார் படத்தை இயக்கவில்லையாம். ‘இன்று நேற்று நாளை’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.