Homeசெய்திகள்சினிமாஷாம் நடிப்பில் வெளியான 'அஸ்திரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஷாம் நடிப்பில் வெளியான ‘அஸ்திரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

ஷாம் நடிப்பில் வெளியான அஸ்திரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஷாம் நடிப்பில் வெளியான 'அஸ்திரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் 12பி, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஷாம். இது தவிர இவர் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர், அஸ்திரம் எனும் திரைப்படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியிருந்தார். பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. கல்யாண் வெங்கட்ராமன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார். கே. சுந்தரமூர்த்தி இதற்கு இசையமைத்திருந்தார். ஷாம் நடிப்பில் வெளியான 'அஸ்திரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படத்தில் ஷாம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து நிரா, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற மே 9ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ