Homeசெய்திகள்சினிமாஷியாமின் 'அஸ்திரம்' பட ட்ரைலரை வெளியிடும் இரண்டு ஹீரோக்கள்!

ஷியாமின் ‘அஸ்திரம்’ பட ட்ரைலரை வெளியிடும் இரண்டு ஹீரோக்கள்!

-

- Advertisement -

ஷியாம் நடிக்கும் அஸ்திரம் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ஷியாமின் 'அஸ்திரம்' பட ட்ரைலரை வெளியிடும் இரண்டு ஹீரோக்கள்!

நடிகர் ஷியாம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான 12பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் உள்ளம் கேட்குமே, லேசா லேசா, இயற்கை என பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். மேலும் இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் ரவி மோகனின் தில்லாலங்கடி, விஜயின் வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர், அஸ்திரம் எனும் திரைப்படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. கே எஸ் சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைக்க கல்யாண் வெங்கட்ராமன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் 2025 பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஷியாமின் 'அஸ்திரம்' பட ட்ரைலரை வெளியிடும் இரண்டு ஹீரோக்கள்!இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேசமயம் இந்த படத்தின் டிரைலர் நாளை (ஜனவரி 31) மாலை 6:04 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரை அருண் விஜய் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ