- Advertisement -
ஷபீர் நடிப்பில் உருவாகி இருக்கும் பர்த் மார்க் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வௌியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவர் ஷபீர். இவருக்கு டான்சிங் ரோஸ் ஷபீர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் தான் ஷபீரின் புகழ் உச்சம் தொட்டது. இப்படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் ஷபீர். இப்படத்தைத் தொடர்ந்து ஷபீர் நடித்த அடுத்த திரைப்படம் தான் ரோடு. த்ரிஷா நாயகியா நடித்த இப்படத்தில் ஷபீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
