- Advertisement -
பாலிவுட்டின் ஜாம்பவான் ஷாருக்கான் நடிப்பில் வௌியாகி உள்ள டன்கி திரைப்படத்தின் வசூல் குறித்த அப்பேட் வெளியாகி உள்ளது.

அட்லீ மற்றும் ஷாருக்கான் கூட்டணியில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜவான். தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இத்திரைப்படம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பெரும் பிளாக்பஸ்டராக அமைந்தது. இதைத் தொடர்ந்து, பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் டன்கி. டாப்ஸி, விக்கி கவுஷல், உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


இப்படத்தை ஷாருக்கானும், ஹிரானியும் இணைந்து தயாரித்து உள்ளனர். படத்திற்கு பிரிதம் இசை அமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 21-ம் தேதி வௌியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் டன்கி திரைப்படம் வசூல் ரீதியாகவும் தொய்வு அடைந்துள்ளது. ஷாருக்கானின் கடந்த 2 திரைப்படங்கள் முதல் நாளிலேயே ரூ.100 வசூலித்த நிலையில், டன்கி திரைப்படம் முதல் நாளில் 58 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இதையடுத்து, 4 நாட்களில் 211 கோடி ரூபாய் வசூல் கிடைந்தது.



