ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. ஷாருக்கான் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் .விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.
ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக கௌரி கான் இந்த படத்தை தயாரிக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.கடந்த வருடம் இந்த படத்தின் டைட்டில் அனௌன்ஸ்மென்ட் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதால் தமிழ் ரசிகர்களிடமும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மேலும் ஜவான் திரைப்படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதோடு இந்த படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் தெலுங்கில் வெளியிடும் உரிமையை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
Stay Tuned…#JawanTrailer pic.twitter.com/BqM0kmxHLQ
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) July 8, 2023
இந்நிலையில் இந்த படம் குறித்த அனவுன்ஸ்மென்ட் விரைவில் வெளியாகும் என்று ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.இது ட்ரெய்லர் குறித்த அப்டேட் ஆக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.