Homeசெய்திகள்சினிமாஓவியக் கண்காட்சி வைத்து அசத்திய ஷாம்லி… திரண்டு வந்து பாராட்டிய திரைபிரபலங்கள்!

ஓவியக் கண்காட்சி வைத்து அசத்திய ஷாம்லி… திரண்டு வந்து பாராட்டிய திரைபிரபலங்கள்!

-

- Advertisement -

நடிகை ஷாம்லி துவங்கியுள்ள புதிய நிறுவனத்தை ஷாலினி, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் பார்வையிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை ஷாலினியின் தங்கையும் நம்ம அஜித்தின் மச்சினிச்சியும் ஆன ஷாம்லி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிப்பிற்காகத் தேசிய விருதைப் பெற்றவர் பேபி ஷாம்லி.

we-r-hiring

ஷாம்லி ‘ஒய்’ என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘வீரசிவாஜி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டு ஓவியம், நாட்டியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

தான் வரைந்த ஓவியங்களை வைத்து சென்னை, பெங்களூரில் ஓவிய கண்காட்சி நடத்தினார் ஷாம்லி. சமீபத்தில் துபாயில் ‘வேர்ல்ட் ஆர்ட் துபாய்’ எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில், தனது ஓவியங்களை ஷாம்லி பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷாம்லி மீண்டும் சென்னையில் கலைக் கண்காட்சி நடத்தியுள்ளார். இந்த நிகழ்வில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஷாலினி, மகள் அனுஷ்கா மற்றும் மகன் ஆத்விக் உடன் கலந்து கொண்டார்.

ஷாலினியைத் தவிர, திரையுலக பிரபலங்கள் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், நடிகர்கள் சிவா, அர்ஜுன் சர்ஜா, இயக்குநர்கள் விஷ்ணு வர்தன், கிருத்திகா உதயநிதி மற்றும் பலர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ