Homeசெய்திகள்சினிமாசங்கர் இயக்கியுள்ள 'கேம் சேஞ்சர்'..... மூன்று ரோல்களில் நடித்திருக்கும் ராம் சரண்!

சங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’….. மூன்று ரோல்களில் நடித்திருக்கும் ராம் சரண்!

-

- Advertisement -

சங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்திருக்கிறார். சங்கர் இயக்கியுள்ள 'கேம் சேஞ்சர்'..... மூன்று ரோல்களில் நடித்திருக்கும் ராம் சரண்!அடுத்தது எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, சுனில், ஜெயராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். திருநாவுக்கரசு இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படமானது 2025 ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

அதன்படி ஏற்கனவே இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யாவும் கேம் சேஞ்சர் படத்தின் இரண்டு முக்கியமான காட்சிகளுக்கு டப்பிங் செய்து முடித்திருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ராம்சரண் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோருடனான அந்த டப்பிங் பணிகளை முடிக்க தனக்கு மூன்று நாட்கள் ஆகியதாகவும் கூறியுள்ளார்.

அடுத்தது இந்த படத்தில் நடிகர் ராம்bசரண், கே ராம்நந்தன் ( ஐஏஎஸ் அதிகாரி), விஜய் பல்ராம், அப்பன்னா என மூன்று ரோல்களில் நடித்துள்ளதாக புதிய தகவல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ