Homeசெய்திகள்சினிமாவந்த இடம் என் காடு..... குத்தாட்டம் போட வைக்கும் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

வந்த இடம் என் காடு….. குத்தாட்டம் போட வைக்கும் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

-

ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். இதனை இயக்குனர் அட்லீ இயக்குகிறார். இதில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கௌரி கான் இந்த படத்தை தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது. மேலும் ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

தற்போது படத்தின் வந்த இடம் என் காடு எனும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை T series ஆடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை பார்க்கும்போது ஷாருக்கானின் அறிமுக பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பாடலில், வரும்போது தெரியணும் வர்ற சிங்கம் பாரு… ஊரு பார்த்து கொடுக்கும் உனக்கு ஒரு பேரு….நான் செஞ்ச சம்பவம் தனி வரலாறு… போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ள நிலையில் அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ