spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎனக்கு சின்ன காயம் தான், பயப்பட வேணாம்... விபத்து குறித்து ஷர்வானந்த் விளக்கம்!

எனக்கு சின்ன காயம் தான், பயப்பட வேணாம்… விபத்து குறித்து ஷர்வானந்த் விளக்கம்!

-

- Advertisement -

ஷர்வானந்த், தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷர்வானந்த். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த மே மாதம் ஷர்வானந்த்திற்கும் அவரது காதலி ரக்ஷிதா ரெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து
வருகின்ற ஜூன் 3ஆம் தேதி இவர்களின் திருமணம் நடக்க இருக்கிறது.

we-r-hiring

இந்நிலையில் நேற்று காலை இவர் பயணித்த ரேஞ்ச் ரோவர் கார், ஹைதராபாத்தில் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே விபத்துக்குள்ளானது.
சிறிய காயங்களுடன் தப்பித்த ஷர்வானந்த்தை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பல செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஷர்வானந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ” நேற்று காலை எனது கார் விபத்தில் சிக்கியது. அது ஒரு சிறிய விபத்து தான். உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுடன் நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். இதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. உங்கள் அக்கறைக்கு மிகவும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ