விதி விளையாடிவிட்டது… தர்ஷன் கைது குறித்து பேசிய சிவராஜ்குமார்…
- Advertisement -
கன்னட திரையுலகில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்படும் செய்தி என்றால் அது நடிகர் தர்ஷன் கைதான செய்தி தான். தனது காதலியும், நடிகையுமான பவித்ரா கௌடாவுக்கு தொடர்ந்து ஆபாச செய்திகள் அனுப்பி தொல்லை கொடுத்ததாக, தனது ரசிகர் ரேணுகா சாமி என்பவரை அடுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதற்காக நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ரா கௌடா உள்பட கிட்டத்தட்ட 15 பேரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றும் விசாரணை நடத்தப்பட்டது.

ஏற்கனவே பிரபல கன்னட நடிகர்கள் கிச்சா சுதீப், உபேந்திரா ஆகியோர்கள் ரேணுகா சாமி கொலை வழக்கில், நியாயம் கிடைக்க வேண்டும் என்று தர்ஷணுக்கு எதிராக பேசி வருகின்றனர். மேலும், நடிகர் தர்ஷனுக்கு திரையுலகினர் மத்தியில் கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. நடிகை ரம்யா உள்பட பலர் தர்ஷன் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

இந்நிலையில், கன்னட சூப்பர்ஸ்டாராக அறியப்படும் நடிகர் சிவராஜ்குமார், தர்ஷன் கைது விவகாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, விதி விளையாடும்போது அதை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியாது, விசாரணை நடைபெற்று வருகிறது. அதுவரை நாம் யாரையும் காயப்படுத்தாமல் அமைதி காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.