- Advertisement -
அனைத்திந்திய மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு உச்ச நடிகராக உருவெடுத்தார். பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் சாஹோ. இத்திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப், மந்திரா பேடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுஜித் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். ஆக்ஷன் அதிரடி நிறைந்த டிராமாவாக இத்திரைப்படம் உருவானது. இப்படத்தில் இணைந்து நடித்த பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.




