spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட 1 கோடி கேட்ட ஷ்ரேயா... ஷாக் ஆன தயாரிப்பாளர்!?

ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட 1 கோடி கேட்ட ஷ்ரேயா… ஷாக் ஆன தயாரிப்பாளர்!?

-

- Advertisement -

ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட நடிகை ஷ்ரேயா ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கேட்டதாகக் கூறப்படுகிறது.

நடிகை ஷ்ரேயா ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தார். ரஜினி உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுக்கு மட்டும் ஜோடியாக நடித்து வந்தார். தற்போது திருமணம் ஆகி குழந்தை என்று ஆன பிறகு கதாநாயகி ஆக இல்லாமல் சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கியுள்ளார்.

we-r-hiring

சமீபத்தில் கன்னடத்தில் வெளியான கப்சா என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷ்ரேயா. அந்தப் படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி ‘போலா ஷங்கர்‘ படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாட ஸ்ரேயாவை அணுகிய போது அவர் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் தரப்பு கொஞ்சம் ஷாக் ஆகி இருக்கிறதாம்.

தமிழில் அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான ‘வேதாளம்’ படம் தான் தெலுங்கில் ‘போலா ஷங்கர்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் லட்சுமி மேனனுக்குப் பதில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

இந்த பர்னிச்சராவது உடைபடாமல் இருந்தால் சரி!

MUST READ