சென்னை ஸ்டோரி… சமந்தாவுக்கு பதில் ஸ்ருதிஹாசன்….
- Advertisement -

நடிகை சமந்தா இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக யசோதா திரைப்படத்திலும் குஷி திரைப்படத்திலும் நடித்திருந்தார். விஜய் தேவரகொண்டா சமந்தா கூட்டணியில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் ‘சிட்டாடெல்’ இணைய தொடரில் நடித்து வருகிறார். இதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகினறன. இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருப்பதாக அண்மையில் அவர் அறிவித்திருந்தார்.

சினிமாவில் கனவம் செலுத்தி வந்தவருக்கு மையோசிடிஸ் எனும் தடை குறைபாட்டு நோய் ஏற்பட்டது. இதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார். பிசினஸ், ஆன்மிக பயணம், சுற்றுலா, தயாரிப்பு நிறுவனம் என பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில், ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் என்பவர் சென்னை ஸ்டோரி என்ற தலைப்பில் சர்வதேச படத்தை இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதில் சமந்தாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வௌியானது. ஆனால், தற்போது சம்ந்தாவுக்கு பதில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். ஆங்கிலத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ருதி டிடெக்டிவாாக நடிக்கிறார். சமந்தா சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு மாற்றாக ஸ்ருதியை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது