நடிகர் ஷியாம் 2001ம் ஆண்டு வெளியான 12B படத்தின் மூலம் அறிமுகமாகி சாக்லேட் பாயாக வலம் வந்தார். முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைய அதைத் தொடர்ந்து இயற்கை, லேசா லேசா, உள்ளம் கேட்குமே போன்ற படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. குறிப்பாக இவரது படங்களில் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தன. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்த ஷியாம் அதற்குப் பின்னர் எந்த படத்திலும் பெரிதளவு கவனம் ஈர்க்கவில்லை. குறிப்பாக இவர் நடித்த “6” படத்திற்காக தன் உடலை பெரிதும் வருத்திக் கொண்டு நடித்து விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் ஷ்யாம் கதையின் நாயகனாக அஸ்திரம் The Secret என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். படத்திற்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.