1996 இல் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘இந்தியன்’ திரைப்படம் திரை உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கமல் நடிப்பில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தினை பிரபல இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் ‘இந்தியன் 2’ படம் குறித்தும் இயக்குனர் சங்கர் குறித்தும் பேசியுள்ளார்.
இந்தியன் 2 திரைப்படம் சங்கர் – சித்தார்த் கூட்டணியின் இரண்டாவது படமாகும். ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் இணைந்த இந்த கூட்டணி தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது
இந்நிலையில் நடிகர் சித்தார்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடித்து முடித்த ‘டக்கர்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் “சங்கர் சார் திரைத் துறையில் என்னை அறிமுகப்படுத்தியதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். என்னை திரை உலகில் அறிமுகப்படுத்திய அவரே என்னை நம்பி மற்றொரு திட்டத்திற்கு என்னை அழைத்த போது நான் வெளிப்படையாக பேசாமல் இருந்தேன். என்னை விட இந்தியன் 2 படம் சங்கர் சார் மற்றும் கமல் சார் போன்ற இருவரையும் பற்றிய படம். கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது கனவு. மேலும் இப்படம் பிரம்மாண்டமாகவும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட 10 மடங்கு பெரியதாகவும் இருக்கும் என என்னால் உறுதி அளிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.