டைனோசர்ஸ் இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சிம்பு
- Advertisement -
தற்போது தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்ததாக டைனோசர்ஸ் இயக்குநருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நாயகன் சிம்பு. கடந்த சில ஆண்டுகளாக சிம்பு நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. தொடர்ந்து பல விமர்சனங்களுக்கும் ஆளாகினார் சிம்பு. ஈஸ்வரன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. மாநாடு படத்திற்கு கிடைத்த வெற்றி சிம்புவுக்கு மீண்டும் ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து தற்போது சிம்பு தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் கமல் நாயகனாக நடிக்க அவருக்கு மகனாக சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திலும் சிம்பு ஒப்பந்தமானார். இது சிம்பு நடிக்கும் 48-வது படமாகும். தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில், அடுத்ததாக சிம்பு டைனோசர்ஸ் திரைப்படத்தை இயக்கிய எம்.ஆர்.மாதவனுடன் புதிய படத்தில் கூட்டணி அமைப்பதாக தகவல் வௌியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.