நடிகர் கமல்ஹாசன், தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதேசமயம் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்கிறார்.இதற்கிடையில் இவர் இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் கமல்ஹாசன் தனது 234 வது படத்தை மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
மேலும் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கிறது.
தற்போது கூடுதல் தகவலாக, நடிகர் சிம்பு இப்படத்தில் இணைய இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
சிம்புவின் ‘STR 48’ படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அதே வேளையில் கமலுடன் இணைந்து சிம்பு நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


