சிறுவயதில் இருந்தே தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதைத் தவிர, சிம்பு STR 49, STR 50, STR 51 ஆகிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதில் STR 49 திரைப்படமானது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்திலும் உருவாக இருக்கிறது.
விரைவில் இந்த படப்பிடிப்புகள் தொடங்க இருக்கின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் சந்தானம், கயடு லோஹர் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு, “சாய் அபியங்கர் ஏற்கனவே STR 49 படத்திற்காக மூன்று பாடல்களை கொடுத்துவிட்டார். அதில் ஒன்று காதல் பாடல்.
#SilambarasanTR About #STR49 ⭐:
“Sai Abhyankar Already Gave Three Songs For the Film..💥 There’s one Love song & we have a plan of singing it together..👌 We don’t actually build up our films before release.. But these three songs will be a Blast..🔥” pic.twitter.com/0hMc02cFO8
— Laxmi Kanth (@iammoviebuff007) May 21, 2025
அந்த பாடலை நானும், சாய் அபியங்கரும் இணைந்து பாட திட்டமிட்டுள்ளோம். நான் பொதுவாக எந்த ஒரு படத்திற்கும் ரிலீஸுக்கு முன்னர் பில்டப் கொடுக்க மாட்டேன். ஆனால் STR 49 படத்தில் மூன்று பாடல்களும் பட்டைய கிளப்பும்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே ரசிகர்கள் பலரும் இப்பொழுதே கொண்டாட தயாராகி வருகிறார்கள்.