“பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா” என்று சிலம்பரசன் நடிகர் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இன்று நடிகர் விக்ரம் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக வலம் வருபவர் விக்ரம். இன்று அவர் பிறந்தநாளை அடுத்து இந்தியாவின் பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதையடுத்து அவர் நடித்துவரும் படங்களில் இருந்து ஸ்பெஷல் அப்டேட்டுகள் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்து வருகின்றனர் படக்குழுவினர். பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், தங்கலான் உள்ளிடப்பட குழுவினர் ஸ்பெஷல் அப்டேட்கள் வெளியிட்டுள்ள விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா. ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோ வெறித்தனமாக உள்ளது. அது வெற்றியடைய வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
Happy Birthday Anna ! #Thangalaan making looks fantastic. Wishing the entire team the very best @beemji @gvprakash @StudioGreen2 https://t.co/vQPQp0ajI0
— Silambarasan TR (@SilambarasanTR_) April 17, 2023
அதற்கு பதிலளித்துள்ள “விக்ரம் நானும் எப்போதும் உன்னை பற்றி ட்வீட் வெளியிடுவேன் கண்ணா” என்று தெரிவித்துள்ளார். இருவரும் அன்போடு நட்பு பாராட்டி வருவது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


