Homeசெய்திகள்சினிமாசந்தோஷா கண்ணீரே..... திருமண நாளை தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

சந்தோஷா கண்ணீரே….. திருமண நாளை தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

-

சிவகார்த்திகேயன், தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் . இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த மாவீரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாகவும் சிவகார்த்திகேயன் சென்னை திரும்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது 13 ஆம் ஆண்டு திருமண நாளை தன் மனைவியுடன் மகிழ்சியாக கொண்டாடி வருகிறார். அதற்காக தான் அவசர அவசரமாக SK 21 படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பி உள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “சந்தோஷ கண்ணீரே நமக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்” என்ற கேப்சனுடன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயன், திரைப்படங்களில் எவ்வளவு பிசியாக நடித்து வந்தாலும் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி அவர்களுடன் மகிழ்ச்சியாக தனது திருமண நாளை கொண்டாடி வருகிறார். தற்போது இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ