பிரபல இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இந்த படத்தை மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்திருந்த அனந்த் என்பவர் எழுதி நடித்துள்ளார். மேலும் படத்தில் ஆர் ஜே விஜய், இர்ஃபான், KPY பாலா பவானி ஸ்ரீ, குமரவேல், மோனிகா, லீலா, வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே மிர்ச்சி சிவா, ஜெய் ஆகியோர் படம் தொடர்பாக பாசிட்டிவ்வான விமர்சனங்களை தந்து வீடியோவையும் வெளியிட்டிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் தற்போது நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்படத்தை பார்த்து தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
#NOVP – Sivakarthikeyan Watched the film and shares his thoughts about it..⭐pic.twitter.com/B9OSbgaQSO
— Laxmi Kanth (@iammoviebuff007) August 9, 2024
“நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தை எழுதி, இயக்கி நடித்துள்ள ஆனந்த் என்னுடன் ரெமோ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த இடத்திலிருந்து தற்போது ஒரு படத்தை இந்த அளவுக்கு இயக்கியிருக்கிறார் என்பதை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும் என்பது நான் எப்போதும் சொல்வது. அதுபோல நண்பர்கள் எல்லாரும் இணைந்து வாழ்க்கையில் என்ன சாதித்தார்கள் என்பதை சொல்வது தான் இந்த படம். படத்தில் பல காட்சிகள் நம் வாழ்க்கையில் நடப்பதை தொடர்புபடுத்தும். படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.