சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் ஒரு ஏலியனை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 6-ம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிரடி மற்றும் ஆக்ஷன் கலந்த டீசராக வௌியானது. கிராபிக்ஸ் பணிகள் காரணமாக படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது. இருப்பினும், கட்டாயம் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
அயலான் படத்திலிருந்து முதல் பாடல் கடந்த ஆண்டே வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாடலை இம்மாத இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.