spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் 'அயலான்' பட டீசர் ரிலீஸ் எப்போது?

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட டீசர் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

அயலான் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திரைப்படம் தான் அயலான். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் ஒரு ஏலியனை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற அக்டோபர் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது சென்னை சத்யம் தியேட்டரில் டீசர் வெளியீட்டு விழாவை நடத்த பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ திரைப்படத்துடன் இந்த டீசர் ஒளிபரப்பப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

we-r-hiring

ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்துடன் இந்த டீசர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ