spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநாகசைதன்யாவை டேட்டிங் செய்கிறேனா? ... நடிகை சோபிதா துலிபாலா அதிரடி பதில்!

நாகசைதன்யாவை டேட்டிங் செய்கிறேனா? … நடிகை சோபிதா துலிபாலா அதிரடி பதில்!

-

- Advertisement -

நடிகர் நாகசைதன்யா உடன் டேட்டிங் செய்து வருவதாக வெளியான செய்திகளுக்கு நடிகை சோபிதா துலிபாலா பதில் அளித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகசைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி அதையடுத்து தங்கள் திருமண முறிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

we-r-hiring

அதையடுத்து இருவரும் எங்கு போனாலும் அவர்களின் விவாகரத்து குறித்த கேள்வி அவர்களை துரத்திக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபா உடன் டேட்டிங் செய்து வருவதாகவும் பல செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் நடிகை சோபிதா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது, சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வரும் வதந்திகளை எப்படிக் கையாளுகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக,  “இப்படி அறிவில்லாதவர்கள் ஏதோ எழுதியதற்கு பதிலளிப்பதற்கு அல்லது தெளிவுபடுத்துவதற்கு பதிலாக, ஒருவர் தனது சொந்த வாழ்க்கையை மேம்படுத்தி, ஒரு நல்ல நபராக இருப்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

MUST READ