- Advertisement -
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி வரும் சூது கவ்வும் நாடும் நாட்டு மக்களும் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரை நட்சத்திர அந்தஸ்திற்கு எடுத்துச் சென்ற திரைப்படம் என்றால் அது சூது கவ்வும் திரைப்படம்தான். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். பிரபல இயக்குநர் நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கி இருந்தார். டார்க் காமெடி பாணியில் உருவான திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்தப் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர். இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற பெயரில் முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. மிர்ச்சி சிவா இப்படத்தில் நாயகனாக நடிக்க, கருணாகரன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம்.எஸ்.அர்ஜூன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
#SOODHUKAVVUM2 நாடும் நாட்டுமக்களும்ShootWrapped&releasingthis summer Producedby @icvkumar @thangamcinemas
A @dir_arjun Directorial @actorshiva @HarishaJestin #Karunakaran @karatekarrthi @dopkthillai @elvoffl @venkatbalajis @ArtDirectorSK2 @swe_tha_ @ThirukumaranEnt @onlynikil pic.twitter.com/tMDLuNCtm6— Press Meet Tv (@PressMeetTv) February 29, 2024