Homeசெய்திகள்சினிமாபரபரப்புகளுடன் புதிய சீசன்... ஸ்குவிட் கேம்-2 நவம்பரில் ரிலீஸ்...

பரபரப்புகளுடன் புதிய சீசன்… ஸ்குவிட் கேம்-2 நவம்பரில் ரிலீஸ்…

-

ஸ்குவிட் கேம் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதி குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. 

கொரோனா காலத்தில் ஓடிடி தளத்தில் ஏராளமான இணைய தொடர்களும், புகைப்படங்களும் வெளியாகின. தமிழ் மொழி மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்கள் ஓடிடி தளத்திற்கு வந்தன. இவை அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அது மட்டுமன்றி, ஹாலிவுட் தொடர்களிலும் மக்கள் ஆர்வம் செலுத்த தொடங்கினர்.

பரபரப்புகளுடன் புதிய சீசன்... ஸ்குவிட் கேம்-2 நவம்பரில் ரிலீஸ்...

அந்த வகையில், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான தொடர் தான் ஸ்குவிட் கேம். ரெட் லைட், கிரீன் லைட் என்று பரபரப்புகளுடன் கூடிய தொடராக இது உருவானது. ஸ்குவிட் கேம் தொடர் உலகம் முழுவதும் பிரபலமானதை தொடர்ந்து, அதனை மையப்படுத்தி ஏராளமான ரீல்ஸ்களும், வீடியோக்களும் வெளியாகி வரவேற்பை பெற்றன.

பரபரப்புகளுடன் புதிய சீசன்... ஸ்குவிட் கேம்-2 நவம்பரில் ரிலீஸ்...

9 எபிசோடுகளைக் கொண்ட இந்த இணைய தொடரில், ஒவ்வொரு எபிசோடும் 18 கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்டது. ‘ஸ்க்விட் கேம் ‘ தொடரை உருவாக்க மொத்த செலவு சுமார் 180 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த தொடர் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று சுமார் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்தது.

இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது, வரும் நவம்பர் 22-ம் தேதி ஸ்குவிட் கேம் இரண்டாம் பாகம் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

MUST READ