நடிகை ஸ்ரீலீலா மீண்டும் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ஸ்ரீலீலா தென்னிந்திய திரை உலகில் வலம் வரும் முக்கியமான இளம் நடிகைகளில் ஒருவராவார். இவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் ‘குர்ச்சி மடத்தப்பட்டி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதை தொடர்ந்து இவர், புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கும் நடனமாடி அசத்தியிருந்தார். தற்போது இவர் தமிழில் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் பராசக்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் வலுவாக அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இன்னும் சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் ஸ்ரீலீலா. இந்நிலையில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் பெடி படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளார் என தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. மேலும் பெடி திரைப்படத்தை புச்சி பாபு சனா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜான்வி கபூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அடுத்தது இந்த படமானது 2026 மார்ச் மாதம் 26ஆம் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.