- Advertisement -
சலார் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் மிரட்டலாக இருக்கும் என படத்தில் நடித்திருந்த ஷ்ரேயா ரெட்டி தெரிவித்துள்ளார்.
கன்னட திரை உலகின் ஜாம்பவனாக உயர்ந்துள்ள இயக்குநர் பிரசாந்த் நீல். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் சலார். பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளிவந்தது. முதல் பாகமாக சலார் 1 தி சீஸ்பயர் என்ற பெயரில் அப்படம் வெளி வந்தது. முதல் பாகத்தில் கான்சார் நாட்டின் மன்னர் ராஜமன்னார் மகளாக ‘ராதா ரமா’ என்ற முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார். இவர் விஷால் நடித்த திமிரு படத்தின் மூலம் பிரபலமானவர்.
