ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடி இருக்கிறார்.
கோலிவுட் திரையுலகின் முக்கிய மற்றும் முன்னணி இயக்குநர் கிருத்திகா உதயநிதி. இவர் மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்த வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரை உலகில் இயக்குநராக அறிமுகம் ஆகினார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரை இயக்கி புகழ் பெற்றார். இதில், காளிதாஸ் ஜெயராம், தன்யா, கருணாகரன், கௌரி கிஷன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இதில் ஜெயம்ரவி மற்றும் பிரபல மலையாள நடிகை நித்யா மேனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியானது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றது. இந்நிலையில், படத்தின் முதல் மெலோடி பாடல் ரெக்கார்டிங்கும் முடிந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த பாடலுக்கு சினேகன் வரிகள் எழுதி உள்ளார். மேலும், பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் பாடி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி உள்ளது.