Homeசெய்திகள்சினிமாரீரிலீஸ் செய்யப்பட்ட சுப்ரமணியபுரம்...... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

ரீரிலீஸ் செய்யப்பட்ட சுப்ரமணியபுரம்…… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

-

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்த படம் மதுரையின் பின்னணியில் எதார்த்தமான கதை களத்தில் நட்பு காதல் அரசியல் நம்பிக்கை துரோகம் என அனைத்தையும் ரசிக்கும்படியாக உருவாக்கப்பட்டிருந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படம் இன்றளவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று தமிழ்நாடு கேரளா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தை முதல் முறை பார்ப்பது போலவே திரையரங்குகளில் பல ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாகமாக படத்தை பார்த்து ரசிக்கின்றனர். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆதரவுகளை பெற்றுள்ளது.

இதனை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காணவந்த சசிகுமார், சமுத்திரக்கனி, ஜெய் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ஜெய், ” இன்றைக்கு சுப்பிரமணியபுரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்போதும் கூட முதல் நாள் போன்ற உணர்வு திரையரங்கிற்குள் கிடைத்தது. இன்று வரையும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நல்ல படைப்பிற்கு என்றும் உயிர் இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. இன்றும் கூட தியேட்டர்கள் ஹவுஸ் புல் ஆக இருப்பதை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய சசிகுமார், ” 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுப்பிரமணியபுரம் ரீரிலீஸ் செய்யப்பட்டாலும் முன்பாக எந்த காட்சியை பார்த்து திரையரங்குகளில் ரசிகர்கள் கைதட்டினார்களோ அந்த காட்சியைப் பார்த்து இப்போதும் கூட கைதட்டுகிறார்கள். முதலில் தமிழ்நாட்டில் மட்டும்தான் வெளியிட நினைத்தோம். கேரளா மற்றும் கர்நாடகாவிலும் கேட்டுக் கொண்டதால் அங்கும் ரிலீஸ் செய்துள்ளோம். ரீ ரிலீஸ் என்றாலும் கூட ஒரு விதமான படபடப்போடு தான் வந்தேன். இரவு முழுக்க தூங்கவில்லை. ஆனால் இன்றைக்கும் இந்த மாதிரியான ஒரு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

நான் குற்றப் பரம்பரை என்கிற வெப் தொடரை இயக்க இருக்கிறேன் வருகின்ற செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மீண்டும் ஒரு சூழ்நிலை அமைந்தால் சுப்பிரமணியபுரம் கூட்டணி இணையும். மதுரையை மையமாக கொண்ட கதை ஒன்றை வைத்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

MUST READ