சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து சூர்யா மீண்டும் சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். ‘சூரரைப் போற்று’ படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவருடன் சேர்ந்து பிரபல தமிழ் நடிகையும், மலையாள நடிகையுமான நஸ்ரியாவும் இணைந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரும், தமன்னாவின் காதலருமான விஜய் வர்மாவும் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
சூரரைப் போற்று திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக பணியாற்றிய ஜி.வி.பிரகாஷ், இந்த படத்திற்கும் பணியாற்ற உள்ளார். ஜிவி பிரகாஷூக்கு இது 100-வது திரைப்படமாகும். இந்நிலையில், இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் வரும் டிசம்பர் இரண்டாவது வாரம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.