Homeசெய்திகள்சினிமாஇன்னொரு டைம் கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இல்லப்பா… மறுமணம் செய்திகளுக்கு பதிலடி கொடுத்த சுகன்யா!

இன்னொரு டைம் கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இல்லப்பா… மறுமணம் செய்திகளுக்கு பதிலடி கொடுத்த சுகன்யா!

-

நடிகை சுகன்யா மறுமணம் செய்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகை சுகன்யா தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தார். சுகன்யா 2002-ம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அப்போதிலிருந்து அவர் தனித்து தான் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய 50-வது வயதில் சுகன்யா தொழிலதிபர் ஒருவரை மறுமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த செய்திகளுக்கு சுகன்யா மறுப்பு தெரிவித்துள்ளார். “நான் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. என் வாழ்க்கையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு எனது தொழில், எனது குடும்பம் மற்றும் எனது நண்பர்கள் உள்ளனர், இவை தவிர்த்து எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றால், அவர்கள் என்னை ‘அம்மானு கூப்பிடுவாங்களா இல்லை ‘பாட்டினு கூப்பிடுவாங்களா என்று கேட்கும் நிலை வந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ