Homeசெய்திகள்சினிமாதலைநகரம் 2வில் சுந்தர் சி, ரைட்டா இல்லை ராங்கா?.... திரைவிமர்சனம்

தலைநகரம் 2வில் சுந்தர் சி, ரைட்டா இல்லை ராங்கா?…. திரைவிமர்சனம்

-

- Advertisement -

சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் 2 படத்தின் விமர்சனம்

கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் திரைப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியிருந்தார்.
அதிரடி குற்றவியல் திரைப்படமான இது மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் சுந்தர் சி, பாலக் லால்வாணி, தம்பி ராமையா, பாகுபலி பிரபாகர், தம்பி ராமையா ஆயிரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சுந்தர் சி யின் இருட்டு படத்தை இயக்கிய VZ துரை இயக்கியுள்ளார். ரைட் ஐ தியேட்டர்ஸ் மற்றும் அருந்தவம் மூவி மேக்கர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. முதல் பாகம் முதல் பாகத்தில் இருந்த ரைட் கதாபாத்திரத்தை முன்னிலையாக கொண்டு இரண்டாம் பாகமான தலைநகரம் 2 உருவாகியுள்ளது.

இதில் முன்னாள் ரவுடியான ரைட் (சுந்தர் சி) ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். மறுபக்கம் வடசென்னை மத்திய சென்னை தென் சென்னை 3 பகுதிகளிலும் மூன்று பிரபல ரவுடிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அந்த மூன்று ரவுடிகளுக்கும் சுந்தர்சியுடன் ஒவ்வொரு விதமான பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் அவர்கள் சுந்தர்சியை கொல்ல திட்டமிடுகிறார்கள்.

அத்திட்டத்தில் இருந்து தப்பிப்பதற்கு சுந்தர் சி மீண்டும் ரவுடியாக மாறுகிறார். கடைசியில் அவர்களிடமிருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதை தலைநகரம் 2 படத்தின் மீதமுள்ள கதையாகும்.

இந்த படத்தில் சுந்தர் சி தன்னால் என்ன முடியுமோ அந்த அளவு நடிப்பை கொடுத்து இருந்தாலும் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். கதாநாயகி பாலக் லால்வானி சுந்தர் சி மீது ஏற்படும் காதல் பக்கா சினிமாத்தனமாக அமைந்துள்ளது.

மேலும் தம்பி ராமையாவும் ஆயிராவும் அவரவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
இது இந்த படத்திற்கு பிளஸ் ஆக இருந்தாலும், படத்தில் மூன்று ரவுடிகளுக்கும் சுந்தர்சிக்கும் இடையேயான பிரச்சனையை எளிமையான திரைக்கதையில் கூறாமல் பிளாஷ்பேக், பிளாஷ்பேக்கிற்குள் பிளாஷ்பேக் என்று இழுத்தடித்து குழப்பி உள்ளார் இயக்குனர் VZ துரை. இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்திற்கு பலமளி.க்கவில்லை

முதல் பாகத்தில் வடிவேலுவின் படத்திற்கு பெருமளவில் கை கொடுத்தது. ஆனால் இந்த படத்தை அது போன்று காட்சிகள் எதுவும் இல்லாததால் படம் திக்கி தடுமாறி இருக்கிறது.

மேலும் அத்தனை ரவுடிசத்தையும் விசாரிக்கும் ஒரு போலீஸ் கூட சென்னையில் இல்லை.
முதல் பாதையில் ஓரளவு சுவாரசியம் இருந்தாலும் இரண்டாம் பாதியில் அந்த சுவாரசியம் குறைய தொடங்கியுள்ளது. அத்துடன் யூகிக்க கூடிய கிளைமாக்ஸ் காட்சிகளுடன் மூன்றாம் பாகத்தின் குறிப்போடு படம் முடிவடைந்துள்ளது.
மொத்தத்தில் தலைநகரம் 2 வில் ரைட், ராங்காக முடிந்துள்ளது.

MUST READ