- Advertisement -
லோகேஷ் கனகராஜூக்கு உளவியல் பரிசோதனையை நினைத்தால் அடக்க முடியாமல் சிரிப்பு தான் வருகிறது என நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்ந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லோகேஷ். தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். அது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிட் அடித்தது. இதையடுத்து, விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படம் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் அளவில் ஹிட் அடித்தது.கமல்ஹாசனுடன் வெற்றிப்படத்தை கொடுத்த லோகேஷ் அடுத்து, விஜய்யுடன் மீண்டும் இணைந்த திரைப்படம் லியோ.


இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வன்முறை காட்சிகள் நிறைந்த லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும், லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த நபர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இச்செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.



