- Advertisement -
பிரபல நடிகர் சந்தீப் கிஷன் திரைத்துறையில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவு பெற்றதை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். யாருடே மகேஷ் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் தமிழில் பிரபலம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற ஆகிய படங்களில் நடித்துள்ளார். அண்மையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. இதைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள ராயன் படத்திலும், சந்தீப் நடித்திருக்கிறார். இதில் தனுஷூக்கு தம்பி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சந்தீப் நடித்த முதல் படமாக பிரஸ்தானம் என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதன் மூலம் திரைத்துறைக்கு அவர் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவு செய்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Congratulations to @sundeepkishan for completing 14 years as an actor.
With a nice selection of films going forward, I am sure you are going to deliver blockbusters in years to come!! 🥳#SundeepKishan pic.twitter.com/3GzZfZYE27
— idlebrain jeevi (@idlebrainjeevi) April 16, 2024