ரஜினி தனது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் தயாராக உள்ளது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியார் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வந்தது.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மும்பையில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை பறந்துள்ளார்.