Homeசெய்திகள்சினிமாஎஸ் ஜே சூர்யா ஒரு நடிப்பரசன்... பொம்மை படம் பார்த்து பாராட்டிய மாநாடு தயாரிப்பாளர்!

எஸ் ஜே சூர்யா ஒரு நடிப்பரசன்… பொம்மை படம் பார்த்து பாராட்டிய மாநாடு தயாரிப்பாளர்!

-

பிரபல நடிகர் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் ‘பொம்மை‘ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. அதன் பின் கடந்தாண்டு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்த படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ” எஸ் ஜே சூர்யா நடித்த பொம்மை திரைப்படம் பார்த்தேன். நடிப்பரசன் எஸ் ஜே சூர்யா மீண்டும் ஒருமுறை தன் பலமான நடிப்பால் பதம் பார்க்கிறார். யுவன் சங்கர் ராஜா தனது இசையில் பின்னியிருக்கிறார். இயக்குனர் ராதா மோகன் வழக்கமான பாணியிலிருந்து விலகி செய்த பொம்மை ரசிக்க வைக்கிறது. ரிச்சர்டின் ஒளிப்பதிவியினால் படம் பளிச்சிடுளீச்சிடுகிறது. மேலும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ