Homeசெய்திகள்சினிமாவிபத்திற்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா!

விபத்திற்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா!

-

நடிகர் சூர்யா தனது 42 வது திரைப்படமான கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு தன்னுடைய 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விபத்திற்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா!இந்த படத்தை பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். படத்தை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஸ்ரேயா கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யா தவிர பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் அந்தமான் பகுதியில் தொடங்கப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. விபத்திற்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா!சமீபத்தில் ஊட்டியில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்படும் போது நடிகர் சூர்யாவிற்கு தலையில் அடிபட்டதாக தகவல் வெளியானது. அதன் பின்னர் சூர்யாவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா ஓய்விற்கு பின்னர் மீண்டும் சூர்யா 24 படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ