சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்த படத்தை ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இதில் சூர்யாவுடன் யோகி பாபு, கோவை சரளா, திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் 3D அனிமேஷனில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானலில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும் இப்படம் ஒரு வரலாற்று சரித்திர திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் இந்த படம் தொடர்பாக வெளிவரும் அனைத்து அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் 2 நாட்களுக்கு முன்பாக கங்குவா கிளிம்ஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து படக்குழுவினர் கங்குவா படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை உறைய வைத்தது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளையும் எகிற செய்தனர்.
The fearless man.
The wild life.
The powerful story.
Get ready to witness it all…The King is here 👑#GlimpseOfKanguva OUT NOW
▶ https://t.co/REvjXHt1cS#HappyBirthdaySuriya@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @kegvraja @UV_Creations @saregamasouth… pic.twitter.com/1bxqjn5YOs— Studio Green (@StudioGreen2) July 22, 2023
இந்நிலையில் சூர்யாவின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா திரைப்படத்தின் கிளிம்ஸ் வெளியாகி உள்ளது. 2 நிமிடம் 22 நொடிகள் கொண்ட இந்த முன்னோட்டத்தில் இதுவரை நாம் பார்த்திடாத சூர்யாவை நம் கண் முன்னே காட்டி இருக்கின்றனர். ஏற்கனவே பல பரிமாணங்களில் சூர்யாவை நாம் பார்த்திருந்தாலும் இந்த காட்டுத் தனமான லுக்கில் மிரள வைத்துள்ளார் சூர்யா. அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பொருந்தும் வண்ணமான ஒரு மிரட்டலான மாஸான இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைத்துள்ளார்.இயக்குனர் சிவாவின் வழக்கமான மசாலா படங்கள் போல இல்லாமல் இப்படம் வரலாற்றுக் காலம் மற்றும் நிகழ்கால கதைகளை ஒன்றிணைக்கும் விதமான கதைக்களம் கொண்டதாக உள்ளது. இந்த முன்னோட்டத்திற்கு அருண் ராஜா காமராஜ் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். முன்னோட்டத்திலேயே படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியாக இருப்பதையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.மேலும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

கங்குவா என்பது நெருப்பு மகன் என்று பொருள் படும். அதற்கேற்றார் போல் முன்னோட்டத்தில் சூர்யா தன் மிரள வைக்கும் பார்வையால் சுட்டெரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி கொளுத்துகின்றனர்.