Homeசெய்திகள்சினிமாஇயக்குனராக உருவெடுத்த சூர்யாவின் மகள்..... இரண்டு விருதுகளை வென்ற ஆவணப்படம்!

இயக்குனராக உருவெடுத்த சூர்யாவின் மகள்….. இரண்டு விருதுகளை வென்ற ஆவணப்படம்!

-

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.இயக்குனராக உருவெடுத்த சூர்யாவின் மகள்..... இரண்டு விருதுகளை வென்ற ஆவணப்படம்! அடுத்தது நடிகர் சூர்யா தனது 44 வது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகாவும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்த வருகிறார். இவ்வாறு நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சூர்யா- ஜோதிகாவிற்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவரின் படிப்பிற்காக மும்பையில் செட்டில் ஆகி இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜோதிகா தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூர்யா – ஜோதிகாவின் மகள் தியா இயக்குனராக உருவெடுத்துள்ளார். இயக்குனராக உருவெடுத்த சூர்யாவின் மகள்..... இரண்டு விருதுகளை வென்ற ஆவணப்படம்!அதாவது ‘LEADING LIGHT – The Untold stories of Women Behind the scenes’ என்ற ஆவண படத்தை இயக்கியிருந்த நிலையில் அந்த படம் Triloka International Film Awards -ல் திரையிடப்பட்டது. பலரது பாராட்டுகளைப் பெற்ற இந்த ஆவணப்படம் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் மற்றும் சிறந்த மாணவர் குறும்படம் ஆகிய பிரிவுகளின் கீழ் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. இதனை சூர்யா – ஜோதிகா ஆகிய இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளனர்.

MUST READ