Homeசெய்திகள்சினிமா'மெய்யழகன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியிடு!

‘மெய்யழகன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியிடு!

-

மெய்யழகன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.'மெய்யழகன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியிடு!

கார்த்தி நடிப்பில் உருவாகியிருந்த மெய்யழகன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, இளவரசு போன்றோரும் நடித்திருந்தனர். இந்த படத்தினை விஜய் சேதுபதி, திரிஷா கூட்டணியில் வெளியான 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் தயாரிப்பில் உருவாக்கியிருந்த இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்திருந்தார். மகேந்திரன் ராஜு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு இருந்தார். குடும்ப பொழுதுபோக்கு பின்னணியில் எமோஷனல் கலந்த கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தினை பாராட்டி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவும் வசூலும் அதிகரித்து வருகிறது.

இருப்பினும் இந்த படத்தின் நீளம் சற்று சலிப்பை ஏற்படுத்துவதால் 18 நிமிட காட்சிகளை படத்தில் இருந்து படக்குழு நீக்கி உள்ளது. இந்நிலையில் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகளை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் படத்தில் இடம்பெற்ற அருமையான காட்சிகளில் இதுவும் ஒன்று எனவும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ