Homeசெய்திகள்சினிமாஹண்டர் வந்துட்டார்.... வெறித்தனமான 'வேட்டையன்' பட ட்ரைலர் வெளியீடு!

ஹண்டர் வந்துட்டார்…. வெறித்தனமான ‘வேட்டையன்’ பட ட்ரைலர் வெளியீடு!

-

வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.ஹண்டர் வந்துட்டார்.... வெறித்தனமான 'வேட்டையன்' பட ட்ரைலர் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தினை ஜெய் பீம் படத்தில் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். காவல்துறையின் உயர் அதிகாரியாக அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். மேலும் பகத் பாஸில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரக்ஷன், கிஷோர், ரோகினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கியுள்ள என்ற படத்தில் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான டீசரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல் படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ பாடலும் இணையத்தை கலக்கி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லரில் நடிகர் ரஜினி வழக்கம்போல் மாஸாக காட்டப்பட்டுள்ளார். அடுத்தது நடிகர் ரஜினி ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார். இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது பெண்களை கொடூரமாக கொலை செய்யும் குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் “அநியாயம் நடக்கும் போது போலீஸ் அதிகாரிகள் அமைதியாக இருப்பதைவிட அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்லை” போன்ற வசனங்கள் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளது. எனவே இந்த படத்தில் அழுத்தமான சோசியல் மெசேஜ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத்தின் இசை நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் படத்தினை வருகின்ற அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ