spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட சூர்யாவின் 'கஜினி'...... உற்சாகத்தில் ரசிகர்கள்!

மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட சூர்யாவின் ‘கஜினி’…… உற்சாகத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா தனக்கென தனி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே சேகரித்து வைத்துள்ளார். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தனது ஆசாத்திய நடிப்பினால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார்.மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட சூர்யாவின் 'கஜினி'...... உற்சாகத்தில் ரசிகர்கள்!நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு தனது 44வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கஜினி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார். மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட சூர்யாவின் 'கஜினி'...... உற்சாகத்தில் ரசிகர்கள்!இதில் சூர்யாவுடன் இணைந்து அசின், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் நடிகர் சூர்யா இரண்டு விதமான லுக்கில் மிரட்டி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டதை ரசிகர்கள் பலரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அதிலும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மற்றும் தமிழ் ரசிகர்கள் கஜினி திரைப்படத்தை மிகுந்த ஆரவாரத்துடன் திரையரங்குகளில் கண்டு ரசிக்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ