spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகார்த்திகேயா பட இயக்குனருடன் இணையும் நடிகர் சூர்யா!

கார்த்திகேயா பட இயக்குனருடன் இணையும் நடிகர் சூர்யா!

-

- Advertisement -

பிரபல நடிகர் சூர்யா, கார்த்திகேயா பட இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 43 உள்ளிட்ட படங்களில் நடிக்க இருக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் இரும்பு கை மாயாவி படங்களில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

we-r-hiring

இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் சூர்யா, கார்த்திகேயா 1, கார்த்திகேயா 2 உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த தெலுங்கு இயக்குனர் சந்தூ மொண்டெட்டி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த புதிய படம் நான்கு வேதங்களை மையமாக வைத்து ஒரு சோசியல் பேண்டஸி கதைகளத்தில் உருவாக இருக்கிறது.
சூர்யா ஏற்கனவே கமிட்டாகியுள்ள படங்களை முடித்த பிறகு சந்தூ மொண்டெட்டி இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

MUST READ