Homeசெய்திகள்சினிமாபோடு வெடிய...... நாளை வெளியாகும் சூர்யாவின் 'கங்குவா' பட டீசர்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

போடு வெடிய…… நாளை வெளியாகும் சூர்யாவின் ‘கங்குவா’ பட டீசர்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

சூர்யாவின் கங்குவா பட டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே இ ஞானவேல் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். போடு வெடிய...... நாளை வெளியாகும் சூர்யாவின் 'கங்குவா' பட டீசர்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இதில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், நட்டி நடராஜ், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படம் பத்திற்கும் மேலான மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று பின்னணியில் ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், ராஜமுந்திரி போன்ற பகுதிகளின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டது. அதன்படி படப்பிடிப்புகளும் நிறைவடைந்து படமானது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதே சமயம் இரண்டாம் பாகத்திற்கு லீடு கொடுக்கும் வகையிலான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் படத்தின் முன்னோட்ட வீடியோவும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின. அடுத்ததாக படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டீசர் குறித்து அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி கங்குவா பட டீசர் நாளை மாலை 4.30 மணியளவில் வெளியாகும் என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த டீசரிலேயே பட குழுவினர் ரிலீஸ் தேதியையும் அறிவிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் டீசர் வெளியாக உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ