சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.
இந்த படம் 3D அனிமேஷன் தொழில்நுட்பத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக கொண்டு ஒரு வரலாற்று சரித்திர படமாக உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ஸ் கடந்த மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கொடைக்கானலில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து ஆந்திர ராஜமுந்திரி காட்டுப்பகுதியில் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு சென்னை மற்றும் பாங்காக் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.