spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யா சேதுபதி நடிக்கும் பீனிக்ஸ்... வெளியானது டீசர்...

சூர்யா சேதுபதி நடிக்கும் பீனிக்ஸ்… வெளியானது டீசர்…

-

- Advertisement -
கோலிவுட், மோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்து இந்திய மொழிகளிலும் இன்று டாப் நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி, அவரது நடிப்பில் தற்போது மகாராஜா என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான மகாராஜா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனிடையே, விஜய்சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாக உள்ளார். சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இத்திரைப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு பீனிக்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் அதிரடியாக இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. படத்தில் சூர்யா சேதுபதியுடன், தேவதர்ஷினி, வரலட்சுமி மற்றும் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பீனிக்ஸ் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வௌியாகி உள்ளது. மிரட்டலான தோற்றத்தில் சூர்யா நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

MUST READ