spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'விஜயகாந்த் மறைந்த செய்தி என் இதயத்தை ஈட்டி போல் தாக்கியது'..... டி ராஜேந்தர்!

‘விஜயகாந்த் மறைந்த செய்தி என் இதயத்தை ஈட்டி போல் தாக்கியது’….. டி ராஜேந்தர்!

-

- Advertisement -

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவிற்கு டி ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'விஜயகாந்த் மறைந்த செய்தி என் இதயத்தை ஈட்டி போல் தாக்கியது'..... டி ராஜேந்தர்!அரசியலிலும் சினிமாவிலும் தடம் பதித்தவர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் இன்று காலை தேமுதிக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் காலமானார் என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. இந்த செய்தி தமிழகத்தில் இருக்கும் ரசிகர்கள் தொண்டர்கள் என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று பலரும் தங்களின் மரியாதையை செலுத்தி வருகின்றனர். அவரின் உடல் கொண்டு செல்லும் வாகனத்திற்கு பின்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கதறி அழுதபடி பின்தொடர்ந்து செல்கின்றனர்.'விஜயகாந்த் மறைந்த செய்தி என் இதயத்தை ஈட்டி போல் தாக்கியது'..... டி ராஜேந்தர்! பல்வேறு திரைப்பட பிரபலங்களும் தங்களின் இரங்கலை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் டி ராஜேந்தர், ” அருமை நண்பர் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி என் இதயத்தை ஈட்டி போல் தாக்கியது” என விஜயகாந்தின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

MUST READ